ஈழத் தமிழ் மக்களின் வரலாறு என்பது மிக கொடூரமான படுகொலைகளாலும் உயிர்ப்பறிப்புகளாலும் தன்னை நிரப்பிக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் இலங்கையின் அரச படைகளாலும் இந்திய அமைதி காக்கும் படையினர் மற்றும் அரச ஆதரவு ஒட்டுக்குழுக்களாலும் நிகழ்த்தப்பட்டவை ஏராளம்.

அந்தவகையில், 1989 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை கட்டவிழத்து விட்டிருந்தன.

அதன்போது, 72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.

ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி. 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர். 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன. வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.

இது போன்று தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட மற்றும் இன்று வரை நீதி கிடைக்காத பல்வேறு அநீதிகள் தொடர்பாக ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் அகளங்கம் நிகழ்ச்சி…

பாதுகாப்பு கூட்டத்தை சிரிப்பில் மூழ்கடித்த அர்ச்சுனாவின் zoom பேச்சு!

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments