இந்திய மாநிலம் ராஜஸ்தானின் பிகானேர் அருகே கோலயாத் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாரத் மாலா நெடுஞ்சாலையில் பயணித்த சிறிய ரக பேருந்து, மடோடா கிராமம் அருகே வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் பேருந்தில் இருந்த 15 பேர் இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருவர் படுகாயம்

அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஓசியான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, இவ்வாறு உயிரிழந்தவர்கள் புனித யாத்திரைக்கு சென்றிருந்த பக்தர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவை உலுக்கிய கோர விபத்து! 15 பேர் ஸ்தலத்திலேயே பலி | 15 Devotees Killed After Accident Rajasthan

மேலும், இருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஜோத்பூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments