யாழ் முஷ்லிம் மக்கள் வெளியேற்றம் இன்று 35, வது ஆண்டு நினைவு..

யாழ்ப்பாண முஷ்லிம்மக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர்,30, ல் பாதுகாப்பாக வெளியேற்றியது தொடர்பான 35, வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், கண் காட்சிகள் என்றுமில்லாதவகையில் 2025, அக்டோபர் மாதம் வடமாகாணத்தில் இடம்பெறுவதை காணலாம்.

நல்ல விடயம் கட்டாயம் அந்த நினைவுகளும் மீட்டுப்பார்க்க வேண்டியது ..

ஆனால் இவ்வாறான துன்பியல் சம்பவம் ஏன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.?
அதற்கான காரணம் ஏன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது?
இந்த உண்மைகளையும் ஏற்பாட்டாளர்கள் காட்சிப்படுத்த வேண்டும் அந்த வரலாறுகளையும் இவ்வாறான நினைவுரைகளை ஆற்றும் அறிஞர்கள் கூறவேண்டும்.
அந்த காரணத்தை மறைத்து வெளியேற்றியது தவறு. இனசுத்திகரிப்பு, என வரைவிலக்கணம் வழங்குவது பக்கசார்பான உரைகளாகவே அமையும்

ஈழவிடுதலை போராட்டம் 1977, க்கு பின்னர் இளைஞர் அமைப்புகள் 36, தோற்றம் பெற்றபோது தனியே தமிழ் இளைஞர்கள் மட்டும் ஆயுதம் ஏந்தவில்லை தமிழ்+ முஷ்லிம் இளைஞர்கள் சமய, இன, சாதி வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் இணைந்தனர்.
இறுதிவரை போராடிய விடுதலைப்புலிகளில் 46, முஷ்லிம் மாவீரர்கள் போராடி உயிர் நீத்த வரலாறு உண்டு.
தமிழ் போராளிகளுக்கு முஷ்லிம்பெயர்களும், முஷ்லிம் போராளிகளுக்கு தமிழ் பெயர்களும் இயக்க பெயர்களாக பரஷ்பரம் மாறி மாறி சூட்டிய வரலாறுகளும் உண்டு.

இந்த ஒற்றுமையான விடுதலைப்பயணம் தொடர்ந்தபோதுதான் 1990, ல் அப்போதைய ஜனாதிபதி ஆர் .பிரமதாசா பதவி ஏற்ற பின்னர் தமிழ் முஷ்லிம்மக்களை பிரித்தாழும் தந்திரோபாயம் காரணமாக தனியாக முஷ்லில் ஊர்காவல்படையை நிறுவி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயல்பட வைத்தார்.

இதனால் விடுதலைப்புலிகளில் முஷ்லிம் இளைஞர்களை பிரித்தும், தமிழ் முஷ்லிம் உறவில் விரிசலையும் ஏற்படுத்த சதிசெய்தமையால் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி வரையும் 1990, செப்டம்பர் மாதம் பல தமிழ் கிராமங்கள் சுற்றிவளைத்து தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், திராய்கேணி, வீரமுனை, மல்லிகைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, வந்தாறுமூலை பல்கலைக்கழகம், சித்தாண்டி, என படுகொலை பட்டியல் நீண்டது அத்தனை படுகொலைகளுக்கும் முஷ்லிம் ஊர்காவல் படையினரும் துணைபோனார்கள்.

இதனால் ஏற்பட்ட தமிழ் முஷ்லிம் பிழவு காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஷ்லிம் மக்கள் படுகொலைக்கு காரணமானது.

அவ்வாறான படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்கவும், முஷ்லிம்மக்களை பாதுகாக்கவும் யாழ் முஷ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் கூறி அவர்களை அனுப்பினர்.அது மட்டும்அல்ல யாழில் ஐந்து சந்தியில இருந்த ஒரு வீட்டில் 500 றிற்கு மேற்பட்ட வாழ்கள் மீட்கப்பட்டது, அது விடுதலைப் புலிகள் பெரும் சண்டைகளில் ஈடுபடும் போது அதை திசை திருப்ப தமிழர்கள் மீது வாழ் வெட்டுக்களை மேற்கொள்ளவன விசாறனையின் போது தெரியவந்தது ,அதை விட சாவகட்சேரியில் அமைந்து இருந்த சுலுத்தானின் கடைக்குள், விமானத்தாக்குதல் நடந்துகொண்டிருந்த வேளை கடைக்குள் இருந்து இரு முஸ்லியம் இளைஞர்கள் போக்கியோடு பிடிபட்டனர்?அதனால் அவர்களை வெளியேற் வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது

இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பாக 2004 ஏப்ரல் கிளிநொச்சியில் விடுதலை புலிகளை சந்தித்த முஷ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் பகிரங்கமாக இது ஒரு துன்பியல் சம்பவம் என்பதை வலியுறுத்தினர்.

எனவே யாழ் முஷ்லிம் மக்களின் வெளியேற்றம் தனியே வடமாகாணத்துடன் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை அது கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்பட்ட விடயம் என்பதை அனைவரும் புரிவது நல்லது.

-பா.அரியநேத்திரன்-
30/10/2025

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments