போதைப்பொருட்களை கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் இந்த கும்பல்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஹாவா குழு உள்ளிட்ட குழுக்களின்  இரண்டாம் நிலை குற்றவாளிகளே தற்போது இலங்கையில் உள்ளதாகவும் முக்கிய புள்ளிகள் வெளிநாடுகளுக்கு தப்பியோடியிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

யாழில் மாணவிகளையும் விட்டுவைக்காத ஆபத்தானவர்கள் ; புலம்பெயர் நாடுகளில் சிக்கப்போகும் சிலர் | Dangerous Men Target Jaffna Girls

குறித்த குற்றச்செயல்கள் தொடர்பில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முறைபாடுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ். மாவட்டத்தில் இயங்கும் வாள்வெட்டுக் குழுக்களுக்கான பணம்,  ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன  செய்திகள் வெளிவந்துள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments