வெற்றிலை பாக்கு பயன்பாடு காரணமாகத் தினமும் 9 வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ விஞ்ஞான பீடத்தின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிலை பாக்கால் இலங்கையருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு | Betel Chewing Causes Health Issues For Sri Lankans

 புற்றுநோயாளிகள்

அத்துடன் வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை காரணமாக நாட்டில் தினமும் 3 மரணங்கள் வரையில் பதிவாவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இளைஞர்கள் மத்தியில் இந்த நிலைமை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு நாற்பதாயிரம் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மதுபான ஆணையம் தெரிவித்துள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments