உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதன்படி அமெரிக்கா சுமார் 8133.46 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவிடம் 8133.46 டன் தங்கம்

அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஜெர்மனி உள்ளது. அந்நாடு சுமார் 3350.25 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? | Us Is The Country With The Most Gold In The World

அடுத்ததாக 2451.84 டன் தங்கம் இருப்புடன் இத்தாலி 3ஆம் இடத்திலும் 2437 டன் தங்கம் இருப்புடன் பிரான்ஸ் 4 ஆவது இடத்திலும் உள்ளது.

5ஆவது இடத்தில் 2298.53 டன் தங்கம் இருப்புடன் சீனா உள்ளது. அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 6ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. சுமார் 879.98 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

845.97 டன் தங்கம் இருப்புடன் 7 ஆவது இடத்தில் ஜப்பான், 634.76 டன் தங்கம் இருப்புடன் 8ஆவது இடத்தில் துருக்கியும், 515.47 டன் தங்கம் இருப்புடன் 9ஆவது இடத்தில் போலந்தும், 310.29 டன் தங்கம் இருப்புடன் 10 ஆவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளன.

அதேவேளை ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பை வைத்து அந்நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments