இந்தியாவின் ஐஏஎன்எஸ் பத்திரிகையில் வெளியாகியிருக்கின்ற ஒரு செய்தியானது அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

குறித்த பத்திரிகையில் விக்கி நஞ்சப்பா எழுதியிருக்கக்கூடிய கட்டுரையில் விடுதலைப்புலிகள் அமைப்பு தாவூத் இப்ராஹிம் என்ற போதைப்பொருள் குற்ற வலைப்பின்னலுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு ஊடாக தங்களது நகர்வை முன்னெடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலாக மாற்றுகின்ற சதி நடவடிக்கையின் ஆதாரமாக குறித்த செய்தி பதிவாகியிருக்கின்றது.

இந்தியாவின் உளவுத்துறையின் அதிர்ச்சிகரமான தகவலாக இது வெளியாகியுள்ள நிலையில் இலங்கையின் புலனாய்வுத்துறைக்கும் இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு நிறுவகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் விடுதலைப்புலிகள் சம்மந்தப்படுத்தப்படுகிறார்கள் என்றால் உண்மையில் இது அவர்களின் செயற்பாடுகளுக்குள் உள்ளடங்காது என ஒவ்வொருவரும் கூற முடியும்.

இலங்கையின் சிங்கள இராணுவத் தளபதிகள் தங்களுடைய நினைவுக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்ற போது, விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களிடம் மதுப்பழக்கங்களையோ புகைப்பிடிக்கும் பழக்கங்களையோ எந்தவொரு புகைப்படங்களிலும் காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்த மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது ஐபிசி தமிழின் அதிர்வு நிகழ்ச்சி……

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments