யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் 29 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு | A 29 Year Old Youth Tragically Died In Jaffna

இது குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த 7ஆம் திகதி காலை 9.00 மணிக்கு குறித்த இளைஞனுக்கு வலிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments