உலகில் முதல் முறையாக ஒரு பூனை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வரலாறு குறித்து இங்கே பார்ப்போம்.
1963-ஆம் ஆண்டு, பிரான்ஸ் தனது விண்வெளி ஆராய்ச்சி முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபெலிசெட் (Felicette) என்ற பூனைவினை விண்வெளிக்கு அனுப்பியது.
இது வெரோனிக் AGI 47 ரொக்கெட்டில் 13 நிமிடங்கள் நீடித்த ஒரு suborbital பயணமாகும்.
இந்த பயணம், பூனையின் நரம்பியல் மற்றும் இதய செயல்பாடுகளை கண்காணிக்க electrodes மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

ஃபெலிசெட், 14 பெண்பூனைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு அமைதியான tuxedo பூனையாகும் ஆகும்.
பயணத்தின் போது, அந்த பூனைக்கு 5 நிமிடங்கள் எடை இழந்த நிலை அனுபவம் ஏற்பட்டது. பயணத்திற்குப் பிறகு, பூனை பாதுகாப்பாக மீட்கப்பட்டாலும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் மூளை ஆய்வுக்காக கருணைக்கொலை செய்யப்பட்டது.
இந்த முயற்சி, மனிதர்கள் விண்வெளிக்கு செல்லும் முன், உயிரினங்களின் உடல் மற்றும் நரம்பியல் தாக்கங்களை ஆய்வு செய்யும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.
ஃபெலிசெட், Laika என்ற ரஷ்ய நாய்க்கு பிறகு, விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் பூனை என்ற பெருமையை பெற்றது.
2017-ல், ஃபெலிசெட்டின் நினைவாக ஒரு 1.5 மீட்டர் உயரம் கொண்ட சிலை பிரான்சில் International Space University-யில் நிறுவப்பட்டது. இந்த சிலை, பூனை பூமியின் மீது அமர்ந்தவாறு விண்வெளியை நோக்கி பார்ப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஃபெலிசெட்டின் பயணம், பிரான்ஸின் விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.
