துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (10) காலை குழந்தை வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடியுள்ளார்.

மேலதிக விசாரணை
இதன் போது கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் பருத்தித்துறை திடீர் மரண விசாரணை விசாரணை மேற்கொண்டார்.
சம்பவம் குறித்து நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
