திக்வெல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த செக் நாட்டின் பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி நேற்று முன்தினம் (09) இலங்கைக்கு வந்து திக்வெல்ல நகரில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணி மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து திக்வெல்ல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
