இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று(09.11.2025) இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் ஒரு எண்ணிம ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் 

மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நல்லிணக்கமும் ஸ்த்திரத்தன்மை ஏற்பாடுவதற்கு அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியமா என்ற நிலையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு நல்லிணக்கத்துக்கு வலுச்சேர்க்கும்.

புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் : வலியுறுத்தும் சுவிஸ் தூதரகம் | New Constitutional Reform Is Necessary

இனங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற நல்லிணக்கம் அமைதி மற்றும் வன்முறை ஏற்ற சூழலை உருவாக்குவதோடு நாட்டின் அரசியல் ஸ்த்திரத் தன்மையை பலப்படுத்தும்.

ஆகவே இனங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இனியும் ஏற்படாமல் இருக்க நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என நம்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments