மட்டக்களப்பு- கரடியனாறு கார்மலை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(10) இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சோமசுந்தரம் வெள்ளை தம்பி என்ற பண்ணையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

 குறித்த பண்ணையார் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை பகுதிக்கு சம்பவ தினமான இன்று காலை 11.00 மணியளவில் சென்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

மட்டக்களப்பில் மாடுகளை மேய்க்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி! | Farmer Dies In Elephant Attack In Batti

இதன்போது அங்கு திடீரென வந்த யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments