தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!தமிழீழ கோரிக்கைகளை முன்வைக்கும் புலம்பெயர் அமைப்புகளுடன் தனக்கு எதுவித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் இன்று (16.11.2025) வெளியான வாரஇறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். 

அர்ச்சுனாவை வழிநடத்துவது புலம்பெயர் தமிழர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அர்ச்சுனா எம்.பி, “ஆம், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், சுமார் 20 புலம்பெயர் அமைப்புகள் உள்ளன.

கொள்கையற்ற அரசியல்

சில புலம்பெயர் அமைப்புகள் தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும் முன்வைக்கின்றனர். அதற்கு உதாரணம் ருத்ரகுமரன். நான் அவ்வாறானவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதில்லை.

தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! | Tamileelam Claims No Connection With The Diaspora

நாடாளுமன்றத்தில் உள்ள முட்டாள்களைப் பார்ப்பதைப் போலவே நான் அவர்களைப் பார்க்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்நாட்டு மக்களுக்கு எந்தவித கொள்கைகளும் இல்லை எனவும் நாட்டின் அரசியல் தலைவர்களுக்கு எந்தவித அரசியல் கொள்கைகளும் இல்லை எனவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments