முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதான பணிகள் நேற்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

 உறவுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

அந்த வகையிலே கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்ல பிரதேசத்தை அண்டிய அயல் கிராமங்களில் உள்ள மக்கள் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அனைவரையும் குறித்த சிரமதான பணிக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் பணிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் ஆரம்பம் | Mullaitivu Maaveerer Commemoration


GalleryGalleryGalleryGallery

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments