நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ் மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் முழுமையான துரோகத்தை இழைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று (17.11.2025) நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது திருமலை சட்ட விரோத விஹாரை அமைப்பு தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் பின்வாங்கியிருக்கக் கூடாது எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோத புத்தர் சிலை

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள்.

வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்த அநுர அரசாங்கம்! | Gajendrakumar Ponnambalam Against Government

இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள்.

நீங்கள் நேற்றிரவு எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்களவர்கள் மட்டுமே. அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது. அந்த இனவாத மதவாதத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது.

உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் இனவாதிகள் இல்லை என சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள்.” என தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments