ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தர் இனம் தெரியதாக நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டநிலையில் சம்பவிடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சி சி சி ரி கமராவில் அப்பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு 12:00 மணியளவில் தொலை பேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

பிரான்ஸிலிருந்து யாழ்.வந்த இளைஞன் வெட்டிக்கொலை! சிசிரிவில் பதிவான காட்சி | Jaffna France Boy Murder

அவரை பின்தொடர்ந்து சென்ற கொலை குற்றவாளி இளம் குடும்பஸ்தர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டி கொலை செய்துள்ளனர் .

அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராடிய தடயங்கள் உள்ளதாகவும் ஒரு குற்றவாளியின் ரீ செட் ஒரு பகுதி இளைஞரின் கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சியும் ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு சந்தேக நபரகள் செல்லும் காட்சிகளிலும் அப்பகுதி சி சி ரீ காமரவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பிரான்ஸ் நாட்டில் இருந்து திரும்பி வந்து பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பெண் ஒருவரை பதிவுத்திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல இருந்த நிலையில் குறித்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது , கொலைக்கான காரணம் இதுவரை அறியமுடியவில்லை.

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் கூடாவளவு பகுதியில் ஆணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று(18) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பொலிஸ் விசாரணை

கொலை செய்யப்பட்டவர் ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸிலிருந்து யாழ்.வந்த இளைஞன் வெட்டிக்கொலை! சிசிரிவில் பதிவான காட்சி | Jaffna France Boy Murder

மோட்டார் சைக்கிளில் பயடித்துக் கொண்டிருந்த போது தூதாவளை வீதியில் வழிமறிக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெளியே சென்ற மகனைக் காணவில்லையென தாயும், தந்தையும் தேடிச் சென்ற வேளை வீதியில் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.

பெற்றோர்களால் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments