இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதிஇத்தாலியில் நிரந்தரமாக வசித்து வந்த பெண் ஒருவர், யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்த நிலையில், மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டிருந்த டொரிங்க்டன் மாலினி யோகராசா (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவரது குடும்பம் இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வரும் நிலையில், இவர் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்வது வழக்கம்.

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி | The Fate Of A Woman Who Came To Jaffna From Italy

அந்தவகையில், கடந்த 20ஆம் திகதி காலை மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், சிறிது நேரத்தின் பின்னர் இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சடலம் தற்போது மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments