குயின்ஸ்லாந்து வாழ் தமிழீழ தமிழக மக்களிற்கான உத்தியோகபூர்வ வேண்டுகோள்,
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய குயின்லாந்து தமிழீழ தமிழக மக்களே
30 வருடப்போராட்டத்தில் நாம் சுமார் ஐம்பதினாயிரம் மாவீரர்களை எமது மண்ணின் விடுதலைக்காக எமது தாயக மண்ணில் விதைத்து இருக்கின்றோம், அவ்வகையில் இவர்களின் தியாகங்கள் வீணாகப்போவதற்கு நாம் இடம் அழிக்க மாட்டோம் ,
அதை தொடர்ந்தும் உயிர்ப்போடு வைத்திருப்பதற்கும் அவர்களின் கனவை நனவாக்கவும் அதைச்சரியான முறையில் அடுத்த தலைமுறையிடம் கொடுக்க வேண்டும் என்ற தூரநோக்கத்தோடு குயின்ஸ்லாந்து மாநிலத்தில்,TCC தமிழீழ மாவீரர் செயற்பாட்டுக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை தங்களிற்குத் தெரிவிப்பதோடு போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள் எமது விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து எமக்குப் பங்களிப்பு செய்து வரும் தீவிரச் செயற்பாட்டாளர்கள் மற்றும் எமது உயிரினும் மேலான தமிழீழ தமிழக மக்கள் அனைவரிடமும் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்வது
27/11/25 தேசிய மாவீரர் நாளிற்கு அனைவரும் வருகை தருவதோடு அந்த புனிதர்களின் கல்லறையில் ஒரு கனம் எமது கைகளை வைத்து உறுதி மொழி எடுப்போம்,
தமிழரின் தாகம் தமிமீழத் தாயகம்
*தொடர்புகளிற்கு*
கிறிஸ் 0421 457 352
மோகன்ராஜ் 0410 296 811
டீன் 0451965 578
