இனவழிப்பில் இருந்து தமிழர்களை பாது காற்க முடியாது என்பதை உணர்ந்த அன்றைய தமிழ் தலைவர்கள் கடவுள் தான் இனி தமிழர்களை பாது காற்க வேண்டும் என தமிழ் தலைவர்கள் சொன்ன காலம் அது,
காலிமுகத் திடலிற்கு பல தமிழ் தலைவர்கள் சென்று தமிழ்களிற்கு நீதி வேண்டும் என உண்ணா விரதம் இருந்த வேளை சிங்களக்காகடையர்களால் அவரிகளின் உடைகள் களையப்பட்டு அவர்களை அவ்விடத்தில் இருந்து கலைக்கப்டதோடு பல தலைவர்கள் அன்று கொலை செய்யப்பட்டார்கள்,
அன்றில் இருந்து இவர்கள் காட்டுவாசிகள், இவர்களிடம் ஜனனாயகரீதில் போராடுவது வெறும் முட்டாள் தனம் என உணர்ந்தபடியால் தான் இனி எங்களை பாது காற்க கடவுளால் தான் முடியும் என தமிழர்கள் சொல்லவேண்டிய நிலை ஏற்பட்டது ,

அவர்களின் அவல நிலையை பார்த்து உருவானவர்தான், அந்தக் கடவுள் மேதகு 16 வயதில் ஒரு கைத்துப்பாக்கியின் அவர் ஆரம்பித்த இனவிடுதலை இனப்பாதுகாப்பிற்கான போராட்டம் அவரின் திறமையான செயல்பாடு மற்றவர்களை இலகுவில் கவரக்கூடிய ஏற்கக்கூடிய கருத்துருவாக்கம் அதனால் ஐம்பதினாயிரம் இளைஞர் யுவதிகள் தக்களின் உன்னதமான உயிரை அற்பணித்து போராடி இந்த மண்ணிலே காவியமானகதையை உலகக் தமிழர்கள் மறக்க மாட்டர்கள்,
அந்த உயர்ந்த தலைவனின் பிறந்தநாள் இன்று 26/11/25 இன்றாகும் தமிழகளாலும் எதையம் செய்யப முடியும், என்ற வல்லமையை இந்த உலகத்திற்கு காட்டிய ஒப்பற்ற தலைவர் மேதகு என்பதை எண்ணி தமிழர்கள் பெருமைப்பட வேண்டும்?
ஒரு சிறு குழுவைத்து இரண்டு நாடுப் படைகளிற்கு எதிராகபோராடி முப்பது வருடம் எமது மண்னை பாதுகாத்த வல்லமை எமது தலைவன் , அவரின் பிறந்தநாள் தமிழர்கள் எழுந்த நாள் இன்றாகும்? ஒப்பற்ற தலைவனே எமது கடவுள் எமது இறைவன் உலகில் நாம் பரந்து வாழ்ந்தாலும் அவரின் பிறந்த நாளை கொண்டாடுவோம், அவரின் இலட்சியத்தை அடுத்த தலைமுறைக்குக்கொண்டு செல்வோம் , தொடர்ந்து போராடுவோம் எமது இனம் வாளே ஒரு நாடு அமைப்போம் அதில் அவர்களை வாழவைப்போம்

தமிழரின் தாகம் தமிழீழத் தாகம்,
good