நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (30) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைய அறிவிப்பின்படி, 370 பேர் காணாமல் போயுள்ளனர்.

309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் அனர்த்ததில் இலங்கை ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு | Sri Lanka Death Toll Rises To 334 Major Disaster

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகபட்சமாக 88 மரணங்கள் கண்டி மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளன.

அத்துடன் பதுளை மாவட்டத்தில் 71 மரணங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 68 மரணங்களும், குருநாகலில் 37 மரணங்களும், மாத்தளை மாவட்டத்தில் 23 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 150 பேரும், நுவரெலியாவில் 64 பேரும், பதுளையில் 53 பேரும், குருநாகலில் 35 பேரும் அனர்த்தம் காரணமாக இதுவரை காணாமல் போயுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments