மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, ​​இன்று (30) பிற்பகல் லுனுவில பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் விமானி உயிரிழந்துள்ளார்.

விங் கமாண்டராக இருந்த அவர், மாரவில முலிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானி | Extreme Weather Helicopter Accident

இறந்தவர் 41 வயது விமானி என தெரியவந்துள்ளது.  

இரண்டாம் இணைப்பு

Update – 06:47

விபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதலாம் இணைப்பு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானி | Extreme Weather Helicopter Accident

லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விழுந்து இந்த உலங்கு வானூர்தி  விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்திற்குள்ளான போது குறித்த உலங்கு வானூர்தியில்  நால்வர் பயணித்ததாகவும், குறித்த நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments