தமிழர் பகுதியில் நேர்ந்த பயங்கரம் ; மர்ம நபர்களின் துப்பாக்கிச் தாக்குதல்களால் ஒருவர் பலிதிருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை பகுதியில் இந்த துப்பாக்கி பிர​யோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் நேர்ந்த பயங்கரம் ; மர்ம நபர்களின் துப்பாக்கிச் தாக்குதல்களால் ஒருவர் பலி | One Killed Gunfire Attack Unidentified Trincomalee

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை சீன துறைமுக நகர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments