இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய இராணுவ படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
டிட்வா புயலிற்கு பின்னர் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் மண்சரிவுகள் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மிக மோசமான ஒரு பாதிப்பை நாடு எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில், இலங்கை இந்த அனர்த்த நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகளுக்காக வெளிநாட்டுகளிடம் உதவி கோரி வருகின்றது.
இதற்கிடையில், அரசாங்கம் தன்னிடம் உள்ள வளங்களை சரிவர பயன்படுத்தாமல் வெளிநாடுகளிடம் கோரி நிற்பது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
