யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (03) முற்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவை மேலதிக நீதிவான் பிறப்பித்துள்ளார்.

யாழில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் ; ஆறு பேருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு | Jaffna Daylight Murder Orders On Six

பின் தொடர்ந்த கார்

 விசாரணையின் போது கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளை காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களை பின் தொடர்ந்து பயணித்த காரொன்றும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஏழாலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.

தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில் ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவை மேலதிக நீதிவான்  பிறப்பித்துள்ளார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்தி அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments