அண்மையில் வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளையும் தாக்கிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் பின்னணியில் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, மொத்தமாக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்கவுள்ளதாக தென் கொரியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு இன்றைய தினம்(4) இதனை அறிவித்துள்ளது.

 மூன்று நாடு

குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளமைக்கவும், உள்ளூர் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆதரவளிக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 500,000 அமெரிக்க டொலர் வழங்கப்படும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உதவிகரம் நீட்டியுள்ள மற்றுமொரு நாடு.. | Another Country Helping Sri Lanka

கடந்த மாதம் பிற்பகுதியில் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் இந்த மூன்று நாடுகளையும் உலுக்கிய இந்த அனர்த்தம், 1,300க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பலிகொண்டது.

அத்துடன், அந்த பகுதிகளில் வீடுகள், வீதிகள் மற்றும் விவசாயப் பயிர்களையும் அழித்து பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments