அனர்த்தத்தின் பின்னர் Rebuilding Sri Lanka திட்டத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற வணிக முயற்சியாளர் தனது தாயாருக்கு வீடொன்றைக் கட்டுவதற்கென சேமித்து வைத்திருந்த 2 மில்லியன் ரூபா பணத்தை நிவாரண நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இலங்கையில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். பெருமளவான உடமைகள் அழிந்து இலட்சக்கணக்கானோர் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தாயாருக்கு வீடு கட்ட சேமித்த மில்லியன் ரூபா பணத்தை நாட்டுக்கு நன்கொடையாக வழங்கிய இளைஞன் | A Young Man Who Donated Two Million Rupees

 Rebuilding Sri Lanka 

இந்த நிலையில், பேரழிவில் சீர்குலைந்து போன நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள Rebuilding Sri Lanka திட்டத்திற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் இலங்கையர்கள், நலன் விரும்பிகளால் நன்கொடைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஜனாதிபதி விருது பெற்ற வணிக முயற்சியாளர் ஒருவர் தாயாருக்கு வீடொன்றைக் கட்டுவதற்கென சேமித்து வைத்திருந்த 2 மில்லியன் ரூபா பணத்தை நிவாரண நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை பேசுபொருளாகியுள்ளது, 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments