இந்தியா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு முருங்கை சாறு, பாதாம் அல்வா என அளிக்கப்பட்ட இரவு விருந்து வைரலாகியுள்ளது. அதன்படி புடினுக்கு வழங்கப்பட்ட விருந்தில் , தென்னிந்திய உணவான `முருங்கை இலை சாறு முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் புதுடெல்லி வந்தார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு முருங்கை சாறு, பாதாம் அல்வா; இந்தியாவில் அமோக விருந்து ! | Putin Enjoys Lavish Vegetarian Feast At India

உணவுகளின்  மெனு கார்டு வைரல்

பிரதமர் மோடி அவரை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார். இதையடுத்து, பிரதமர் மோடியும் அதிபர் புடினும் நேற்று முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியா வந்த புதினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு விருந்தளித்தார்.

ரஷ்ய அதிபர் புதினுக்கு முருங்கை சாறு, பாதாம் அல்வா; இந்தியாவில் அமோக விருந்து ! | Putin Enjoys Lavish Vegetarian Feast At India

இந்த விருந்தில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள், ரஷ்ய தூதுக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புதினுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் இடம் பெற்ற உணவுகளின் விவரம் அடங்கிய மெனு கார்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்ய அதிபர் புதினுக்கு முருங்கை சாறு, பாதாம் அல்வா; இந்தியாவில் அமோக விருந்து ! | Putin Enjoys Lavish Vegetarian Feast At India

முருங்கை இலை சாறு, தென்னிந்திய ரசம், காஷ்மீரி வால்நட்டால் செய்யப்பட்ட குச்சி டூன் செடின், பான்-கிரில் செய்யப்பட்ட கருப்பு பயறு கபாப்ஸான காலே சேன் கே ஷிகாம்பூரி, காரமான சட்னியுடன் கூ டிய காய்கறி ஜோல் மோமோ என காஷ்மிர் முதல் தென்னிந்தியா வரையிலான உணவுகள் முதலில் பரிமாரப்பட்டிருக்கின்றன.

பாரம்பரிய உணவுகளுடன், பல்வேறு ஊறுகாய்கள் மற்றும் சாலடுகள் உள்ளிட்டவைகளுடன் மாதுளை, ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி சாறுகள் அடங்கிய ஜூஸ்கள் சாப்பிட்டு முடித்தவுடன் பரிமாரப்பட்டிருக்கின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments