இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, பட்டினியால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கடுமையான வெள்ளம் 

தென்கிழக்கு மற்றும் தெற்காசியாவை வெப்பமண்டல புயல்கள் மற்றும் பருவமழை சங்கிலித்தொடராகத் தாக்கி, சுமத்ரா மழைக்காடுகளிலிருந்து இலங்கையின் மலைப்பகுதித் தோட்டங்கள் வரை நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளைத் தூண்டியுள்ளது.

ஆசியாவை வாட்டி எடுக்கும் காலநிலை.. மற்றுமொரு நாட்டில் 900 உயிரிழப்புக்கள் | Death Toll From Indonesia Floods Passes 900

கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் 1,790 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஆச்சே மற்றும் வடக்கு சுமத்ரா மாகாணங்களில், வெள்ளம் சாலைகளை அடித்துச் சென்றுள்ளது, வீடுகளை சேற்றில் மூழ்கடித்துள்ளது, மேலும் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments