வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில் உள்ள பாலத்தினை புனரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் இன்று(6) ஆரம்பித்துள்ளனர்.

போக்குவரத்து தடை

அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

இந்திய இராணுவ பொறியியல் பிரிவினரால் புனரமைக்கப்பட உள்ள முல்லைத்தீவு பாலம் | Paranthan Mullaithivu Road Reconstruction

அத்தோடு, கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments