டிட்வா சூறாவளி அனர்த்தத்திற்கான இலங்கையின் பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக அமெரிக்க வான்போக்குவரத்துத்திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக்குழுவினைச்(CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் கட்டுநாயக்க விமானத்தளத்தினை ஞாயிற்றுக்கிழமை (07) அன்று வந்தடைந்தனர்.

இக்குழுவினர் வருகை தந்தபோது அமெரிக்கத்தூதுவர் ஜுலீசங் மற்றும் இலங்கையின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருனஜயசேகர ஆகியோர் வரவேற்றனர்.

அமெரிக்க அலுவலர்களும் அவர்களின் இலங்கை சகாக்களும் உடனடியாக பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசியமான நிவாரணப் பொருள் விநியோகங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இலங்கைக்கு சர்வதேச ஆதரவு அதிகரிப்பு ; இலங்கை வந்த அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் | Two Us Planes Arriving Srilanka Disaster Titva

குவாமிலிருந்து செயற்படும் 36ஆவது CRGமற்றும் ஏனையபிரிவுகளைச் சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரர்கள், இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அடையாளம் காணப்பட்டபகுதிகளுக்கு உடனடி போக்குவரத்து மற்றும் ஏற்பாட்டியல் உதவிகளை வழங்குவார்கள்.

கடேனா விமானத்தளத்திலுள்ள படைகள் உட்பட, அமெரிக்க விமானப்படையின் 374ஆவது வான் போக்குவரத்துப் பிரிவு (யோகோட்டாவிமானத் தளம், ஜப்பான்) மற்றும் அமெரிக்க மெரைன் கோர்ஸ் இன் III Marine Expeditionary Force (ஒகினாவா, ஜப்பான்) என்பன உதவி செய்வதற்கான மேலதிக பிரிவுகளில் உள்ளடங்குகின்றன.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிறிஷாந்த அபேசேன, துறைமுகங்கள் மற்றும் சிவில்விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்தருவான் கொடித்துவக்கு மற்றும் அனர்த்தமுகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர்ஜெனரல் சம்பத் கொடுவேகொட ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments