பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வாழைச்சேனை 20ஆவது மைல்கல் அருகே இரண்டு துப்பாக்கிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (08) காலை வலான மத்திய மோசடி தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த பகுதியில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனையில் துப்பாக்கிகள் மீட்பு | Guns Recovered In Valaichchenai Colombo Road

இதன்போது, நான்கு தோட்டாக்கள் கொண்ட மைக்ரோ கைத்துப்பாக்கியொன்றும் வெளிநாட்டுத் தயாரிப்பு ரிவோல்வர் வகை துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக, மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள வாழைச்சேனை காவல்துறையினர் ஆயுதங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments