மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட வீதியினால் சென்ற போது தவறுதலாக சேற்றில் புதையுண்டு தரம் 13ல் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் பல வீதிகள் வெள்ளத்தில் முழ்கியிருந்த நிலையில் அவற்றின் கட்டமைப்பு சீர்குழைந்தால் ஆபத்துக்கள் ஏற்பட அதிகரித்த வாய்ப்புள்ளது எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்
