அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்காக ட்ரம்ப் தங்க அட்டை எனும் புதிய திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், ட்ரம்ப் தங்க அட்டை மூலம் அமெரிக்காவில் குடியுரிமை பெறலாம் என அவர் அறிவித்துள்ளார்.

இது கிரீன் கார்டு போலவும் மற்றும் அதனைவிட சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை 

அமெரிக்காவில் குடியுரிமை வழங்கும் இந்த ட்ரம்ப் தங்க அட்டை பெறுவதற்கு ஒரு மில்லியன் டொலர் நன்கொடையை அமெரிக்க அரசுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்புவோருக்கு ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு | Us Permanent Residency Trump Gold Card Launch

விண்ணப்பதாரரின் பின்னணி சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டுமே ட்ரம்ப் தங்க அட்டையை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி, ட்ரம்ப் கார்ப்பரேட் தங்க அட்டை மூலம் செல்லும் ஓர் ஊழியருக்கு இரண்டு மில்லியன் டொலர் கட்டணமாகவும் மற்றும் ட்ரம்ப் கார்ப்பரேட் பிளாட்டினம் அட்டை மூலம் செல்லும் ஓர் ஊழியருக்கு ஐந்து மில்லியன் டொலர் கட்டணமாகவும் ட்ரம்ப் அரசு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments