அவுஸ்திரேலியாவின் நடந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டில் கறுப்பு தினம் அறிவிக்கப்பட்டு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. 

அந்நாட்டு பிரதமர் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இதனை அறிவித்துள்ளார்.

மேலும், “யூத விரோதத்தை ஒழிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், அதை ஒன்றாகச் செய்வோம்” என்று அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

துக்க தினம் 

அவுஸ்திரேலியா, இந்த தாக்குதலை செய்தவர்களை விட வலிமையானது என்றும் ஒருபோதும் பிரிவினை மற்றும் வெறுப்புக்கு அடிபணியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அரைக்கம்பத்தில் தேசியக் கொடி.. அவுஸ்திரேலிய பிரதமர் வெளியிட்ட தகவல் | Flags Will Fly Half Mast Australia Day Pm

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டில் துக்க தினம் அறிவிக்கப்பட்டடு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments