பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

கடந்த ஏழாம் திகதி Seine-et-Marne மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல்  விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 21 வயதான சதீஸ்குமார் அபிசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

எதிரே வந்த கார்

காலை வேளையில் இலத்திரனியல் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்து போது, எதிரே வந்த கார் ஒன்று மோதித்தள்ளியுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய 30 வயதான சாரதி தப்பிச் சென்றுள்ளார். எனினும் தான் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடம் விபத்து தொடர்பில் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கோர விபத்து - ஸ்தலத்தில் பலியான ஈழத்தமிழ் இளைஞன் | Sri Lankan Boy Dies In A Accident In France

அதற்கமைய உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான சாரதிக்கு மேற்கொண்ட இரத்த பரிசோதனையில் 1.5 கிராம் மதுபானம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments