அவுஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலின் போது, தாக்குதலில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி ஒருவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்களில் நவீத் அக்ரம் (24) என்று பெயரிடப்பட்ட குறித்த துப்பாக்கிதாரிகளில் ஒருவரின் புகைப்படத்தை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர் தனது 50 வயதான தந்தையுடன் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்ந்து, பொலிஸாருடன் நடந்த தாக்குதலில் தந்தை கொல்லப்பட்ட நிலையில் மகனான நவீத் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

