பிரான்ஸில் அடுத்தாண்டு ஜனவரி முதல் நிரந்தர குடியுரிமை கோரும் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், குடியுரிமை கோரும் அனைவரும் 45 நிமிடங்கள் கொண்ட இலத்திரனியல் பரீட்சையில் தோற்றி 80 வீதமான புள்ளிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடியேற்ற சட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடைமுறையை உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

குடியிருப்பு அட்டை

இதனடிப்படையில் பல ஆண்டுகள் செல்லுபடியாகும் குடியிருப்பு அட்டை மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி கோருவருக்கு இந்த பரீட்சை கட்டாயமானதாகும்.

பிரான்ஸின் புதிய குடியுரிமைச் சட்டம்...! புலம்பெயர்ந்தோருக்கு கடும் சிக்கல் | France Permanent Residence Test For Foreigners

ஏற்கனவே குடியுரிமை பெற்றுவர்கள் மற்றும் பிரான்ஸில் அகதி அந்தஸ்து கோரியுள்ளவர்களுக்கு இது பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் குடியரசின் மதிப்புகள், உரிமைகள் மற்றும் கடமைகள், அரசியல் அமைப்பு, வரலாறு, பண்பாடு மற்றும் சமூக வாழ்க்கை போன்ற ஐந்து தலைப்புகளில் 40 கேள்விகள் கேட்கப்படும்.

பிரான்ஸில் குடியுரிமை

நிரந்தர குடியுரிமைக்காக B2 மொழித் தரம் பெற்றிருப்பது அவசியமாகும்.

இது பல்கலைக்கழகத்தில் சேர தேவையான அதே தகுதியாகும். அரசியல் கருத்துகளைப் புரிந்துகொள்ள பிரெஞ்சு மொழியில் நல்ல தேர்ச்சி அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரான்ஸின் புதிய குடியுரிமைச் சட்டம்...! புலம்பெயர்ந்தோருக்கு கடும் சிக்கல் | France Permanent Residence Test For Foreigners

பிரான்ஸில் குடியுரிமை பெற காத்திருக்கும் தமிழர்கள் பரீட்சைக்கான தகுதியை வளர்த்துக் கொள்வது இன்றியமையாததாகும்.

பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments