தாயார் படிக்குமாறு கூறியதால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

யாழில் தனக்கு தானே தீ வைத்த கொண்ட மாணவிக்கு இறுதியில் நடந்த துயர் ; மனதை ரணமாக்கும் காரணம் | Student In Jaffna Who Harmed Herself

 மன விரக்தி

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தாயார் அந்த மாணவியை  படிக்குமாறு தினமும் கூறுவதால் மாணவி மன விரக்தியில் இருந்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த 12ஆம் திகதியும் இவ்வாறு தாயார் கூறியதால் குப்பைகளை எரிப்பது போல் பாசாங்கு செய்து பெற்றோலை தன்மீது ஊற்றி தனக்கு தானே தீ பற்ற வைத்துள்ளார்.

இதன்போது அயல்வீட்டில் உள்ளவர்கள் மாணவியை காப்பாற்றியவேளை குறித்த மாணவி அவர்களுக்கு சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

பின்னர் தீக்காயங்களுக்குள்ளான அவரை மந்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments