உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது.

இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இராணுவ தளபதிகள்

இருப்பினும், தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் எதிர்கால திட்டம்...! புடினின் உச்ச கட்ட எச்சரிக்கை | Putin Warns Ukraine More Land Could Be Taken

ஆகையினால், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பிண்ணனியில் வருடாந்திர கூட்டத்தில் இராணுவ தளபதிகள் மத்தியில் புடின் உரையாற்றியுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் 

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க தவறினால் உக்ரைனில் தனது பிராந்தியக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த ரஷ்யா நடவடிக்கை எடுக்கக்கூடும்.

மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்றுவோம் அத்தோடு இராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால் இராணுவ பலத்தை நம்ப ரஷ்யா தயாராக உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யாவின் எதிர்கால திட்டம்...! புடினின் உச்ச கட்ட எச்சரிக்கை | Putin Warns Ukraine More Land Could Be Taken

பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புகின்றது.

இராஜதந்திரம் வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா பாடுபடும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments