யாழில் வீட்டினை இடித்துக்கொண்டிருந்த சிறுவன் சுவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் ரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – விசுவமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சன் (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் வேலைக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி | The Fate Of A Boy Who Went To Work In Jaffna

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்து, நேற்றையதினம் குருநகர் – பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்தார்.

ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடினார்.

இதன்போது மற்றைய சுவர் அவர்மீது விழுந்ததில் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments