சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து, தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவரை வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ, வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடி கைதான 19 வயது கர்ப்பிணி பெண் ; தமிழர் பகுதியில் செய்த மோசமான சம்பவம் | 19 Year Old Pregnant Woman Arrested In Tamil Area

கர்ப்பிணிப் பெண்

பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, சந்தேக நபர் தனது கணவருடன் இணைந்து மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்துக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அவரிடமிருந்து 96 போத்தல்கள் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு மதுபான பெக்கெட்டுகளை விற்பனை செய்வதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட கசிப்புத் தொகையையும் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments