வடக்கு கிழக்கில் அத்துமீறிய பௌத்த சின்னங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டம் 

யாழ்.பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் விகாரை..! போராட்டத்தில் குதித்த மாணவர்கள் வெளிப்படுத்திய இரகசியங்கள் | Jaffna University Students Join The Protest

இதன்போது ‘தமிழர் தாயகம் எங்கள் சொத்து’, ‘தையிட்டி தமிழர் சொத்து பௌத்த ஆக்கிரமிப்புகளை உடனே நிறுத்து’ போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டது.

அதுமட்டுமன்றி யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் விகாரை அமைக்க முயற்சி செய்ததாகவும் அதனை பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.   

அத்துடன் நேற்றைய தினம் தையிட்டியில் பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments