அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா – சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் என்று அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க காங்கிரஸிடம் பென்டகன் சமர்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் ஏற்படும்; அமெரிக்கா எச்சரிக்கை | Conflict Will Erupt India And China Us Warning

பென்டகன் சமர்பித்த அறிக்கை

2049ஆம் ஆண்டுக்குள் சிறந்த நிலையை அடைய அருணாச்சலப் பிரதேசம், தாய்வான் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள பிற பிராந்தியங்கள் மிகவும் முக்கியம் என்று சீனா முடிவு செய்துள்ளது.

இதற்காக ஒரு சர்வதேச உயர்மட்டக் குழுவையும், பலமான இராணுவ கட்டமைப்பை உருவாக்குவதை சீனா நோக்கமாக கொண்டிருக்கிறது.

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டத்தை தணிப்பது என்பது சீனாவின் நீண்டகால இரட்டை உத்தியின் ஒரு பகுதி. சீனா அதன் நட்புநாடான பாகிஸ்தானைப் போல, இராணுவத்தின் மூலம் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கும்.

எனவே, இனி வரும் ஆண்டுகளில் இந்தியா – சீனா இடையிலான உறவில் மோதல் ஏற்படலாம், என தெரிவித்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments