இந்தியாவில் விவாகரத்து கேட்ட மனைவியை,  வீதியில்  வைத்து கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த 39 வயதான புவனேஷ்வரி என்பவர் பெங்களுருவில் வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார்.

இரத்த வெள்ளத்தில்  மனைவி

இவரது கணவர் பாலமுருகன் (சேலம் மாவட்டம்) ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். புவனேஷ்வரி கணவர் பாலமுருகனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலமுருகன் வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவி புவனேஷ்வரியை சாலையில் வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனையடுத்து கையில் துப்பாக்கியுடன் பாலமுருகன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த புவனேஷ்வரி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், தமிழ்நாட்டில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவாகரத்து கேட்ட மனைவியை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments