யாழில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடுவில் – மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மதுபோதையில் சென்று மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மரண விசாரணை

இதையடுத்து, வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ள நிலையில் அவர் இரவு வீட்டுக்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பின்பு, அவரை நேற்று (27) காலை தேடியவேளை வீட்டின் அருகேயுள்ள காணி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் சோகம்: உடுவில் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு | Body Of Family Man Recovered From Well In Jaffna

அவர் குறித்த கிணற்று கட்டு மீது அமர்ந்திருந்து இதற்கு முன்னரும் மதுபானம் அருந்துவது வழமை என்றும் அவ்வாறு நேற்றிரவு போதையில் இருந்து மதுபானம் அருந்தியவேளை கிணற்றில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் ஆகியோரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments