பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் அண்மையில் தற்காலிகமாக புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதியில் தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக சென்ற போது இன்று (27) மாலை 4 மணியளவில் தவறி நீருக்குள் வீழ்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு | Body Of Missing Person Recovered From Under Bridge

இதனையடுத்து காணாமல் போனவரை தேடும் பணிகளில் பிரதேச மக்கள் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களுடன் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் காணாமல் போனவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments