நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழக வெற்றிக கழக தலைவரை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், “விஜய் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தமான கலைஞர்களில் ஒருவர்.
புதிய முயற்சிகள்
திரையுலகில் அவரது பயணமும் வெள்ளித்திரையில் அவர் வெளிப்படுத்திய துடிப்பான ஆற்றலும் உண்மையிலேயே தனித்துவமானவை, என்றும் மறக்க முடியாதவை.
திரையுலகின் இந்தப் பக்கத்தை நிறைவு செய்துவிட்டு அவர் தனது புதிய பயணத்தைத் தொடங்கும் போது அவரது அந்தத் துடிப்பையும் ஆளுமையையும் சினிமா உலகம் நிச்சயமாக இழக்கும்.
அவர் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் அனைத்திலும் பெரும் வெற்றியும் சிறப்பும் கிடைக்க மனதார வாழ்த்துகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

