லண்டனில் பணிபுரியும் இந்தியத் தமிழர் ஒருவரை இலங்கைத் தமிழர் ஒருவர் பாகுபாடு காட்டிய குற்றச்சாட்டில் இழப்பீடு வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் பிரபலமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இலங்கைத் தமிழரான முகாமையாளர் அவருக்கு கீழ் பணிபுரியும் இந்தியத் தமிழர் ஒருவருக்கு எதிராக இனவெறி பாகுபாடு காட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், தன்னை உரிய முறையின்றி பணிநீக்கம் செய்ததாகவும், பாதிக்கப்பட்டவர் அந்நாட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சுமார் 67,000 பவுண்ட்ஸ் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் , லண்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள முன்னணி உணவு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

அங்கு தனது முகாமையாளாரக இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தன்னை “அடிமை” என்று அழைத்ததாகவும், “இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்” எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , அவரின் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என உறுதிப்படுத்தினார். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments