தமிழர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து 23இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளைகிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து 23இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு உரிமையாளர் இல்லாத நேரத்தில் கடந்த 29ஆம் திகதி இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், இது பாதிக்கப்பட்டவர்கள், தர்மபுரம் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய நேற்று (30.12.2025) தர்மபுரம் பொலிஸார் கிளிநொச்சியில் வைத்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

யாழை சேர்ந்தவர் கைது 

சந்தேக நபர், 36 வயதுடைய யாழ்ப்பாணம் எழாலைப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. 

தமிழர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து 23இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை | 23 Lakhs Worthy Gold Jwells Stolen In Kilinochchi

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து தற்போது நான்கு மோதிரங்கள், ஒரு தோடு, ஒரு செயின், 41, 860 பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டில், 23, 2500 ரூபாய் பெறுமதியான தங்க நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments